Saturday 26 February 2011

மாதவா... சேது மாதவா - சீனு



 இசை : தேவா  பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : ஹரிஹரன்  வருடம் : 2000

மாதவா... சேது மாதவா
உன் கையில் உள்ள புல்லாங்குழல் நான் மாதவா
மாதவா… என் மாதவா
என் அம்மை அப்பன் ஆசான் நீதான் மாதவா
கோகுலம் மேவிய மாதவா
கோபியர் கூவிய மாதவா
குன்றினை ஏந்திய மாதவா

( மாதவா..

குருவாயூர் திருக்கோயில் குடிகொண்ட பெருமானே
குழலிசை தினந்தோறும் கேட்கிறதே
மதுசூதன் திருப்பாதம் மறவாத மனதுக்குள்
புதுப்புது இசைப்பூக்கள் பூக்கிறதே
வாசத்தமிழிசையில் வழியும் செந்தேனை
வாரி எனக்களித்த வள்ளல நீ தானே
தேவா உன் திரு அருளை தேயாத திருப்புகழை
நாவாற நாள்முழுக்க பேசவா நானும் பாடவா
தாயாக எனை வளர்த்து தெவிட்டாத இசைகொடுத்து
வாயாற பாடவைத்தாய் கேசவா என் கேசவா
கேசவா ஆதி கேசவா
என் நெஞ்சில் வாழும் தெய்வம் நீதான் கேசவா

கூட்டங்கள் இருந்தாலும் கரகோஷம் எழுந்தாலும்
எனக்கது பெரிதாக தோன்றுமா
இசை ஞானக்கடல் நீயே எதிர்வந்து அமர்ந்தாயே
இதைவிட பெரும்பேறு வேண்டுமா
ஏழு ஸ்வரங்களையும் எதிரில் கண்டேனே
வாழும் கலைமகளின் வடிவம் என்பேனே
நீபார்த்து வளர்ந்த பிள்ளை
உன் கையில் தவழ்ந்த முல்லை
மேன்மேலும் வளர்வதற்கு வாழ்த்திடு நீ வாழ்த்திடு
உயிரே உன் திருவடிக்கு ஒருகோடி வந்தனங்கள்
உளமாற நான் கொடுப்பேன் ஏற்றிடு நீ ஏற்றிடு
கேசவா ஆதி கேசவா
என் நெஞ்சில் வாழும் தெய்வம் நீதான் கேசவா
கேசவா ஆதி கேசவா
என் அம்மை அப்பன் ஆசான் நீதான் கேசவா
நீயின்றி நானில்லை கேசவா
நீரின்றி மீனில்லை கேசவா
நானுந்தான் கைப்பிள்ளை கேசவா
கேசவா ஆதி கேசவா ....



No comments: